ஆர்ச்சர்ட் டவர்ஸில் சென்ற ஆண்டு ஏப்ரலில், 34 வயது பிரான்ஸ் நாட்டவர் ஒருவரை உயிர்போகும் அளவிற்குத் தாக்கியதாக நேற்று இரண்டு பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ராடின் அப்துல்லா ராடின் பாருடின் மற்றும் முகம்மது டேனியல் அப்துல் ஜலில் என்ற 24 வயதுடைய இரண்டு பேர், நவரோ டுரியான் ரெகிஸ் என்ற பிரான்ஸ் நாட்டவருக்குக் கடுமையான காயத்தை விளைவித்ததாகக் கூறும் குறைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த இருவர் மீதும் தொடக்கத்தில் கொலைகுற்றம் சுமத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தாக்கப்பட்ட ரெகிஸ் 2016 மே மாதம் மரணம் அடைந்தார். குற்றவாளிகள் இருவருக்கும் அக்டோபர் 19ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
உயிர்போகும் அளவுக்கு தாக்கியதாக இருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்
1 mins read

