பீஷான் எம்ஆர்டி பணிமனையில் பாதுகாப்பான நிலைகளைப் படம் எடுத்த இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை போலிஸ் தடுத்து நிறுத்தி விசாரித்தது. அந்த இரண்டு பேரும் அந்தப் பணிமனைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் இடைவழி பேருந் தில் ஏறிச்சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு நுழைவு அனுமதி இல்லை என்பது பணிமனையின் பாதுகாப்பு நுழைவாயிலில் தெரிய வந்தது. பணிமனையைப் படம்பிடிக்க அவர்கள் விரும்பினர். நுழைவுக் கதவு அ-ருகே நின்றுகொண்டு புகைப்பட சாதனத்தைப் பயன் படுத்த அவர்கள் தொடங்கினர். "பீஷான் ரயில் பணிமனையைப் படம் எடுத்துக்கொண்டிருந்த இரண்டு பேரை பணிமனையின் பாதுகாப்புக் காவலர் அணுகினார்," என்று எஸ்எம்ஆர்டி பேச்சாளர் ஒருவர் கூறினார். "அந்த இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்களை போலிசிடம் பணிமனை பாதுகாப்புக் காவலர் ஒப்படைத்தார்.
அனுமதி இன்றி எஸ்எம்ஆர்டி பீஷான் பணி மனைக்குள் செல்ல முயன்று பிடிபட்ட இரண்டு வெளி நாட்டினர். (அமர்ந்து இருப்போர்) படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

