புக்கிட் பாத்தோக்கில் எல்லா நீர்க்குழாய்களிலும் சோதனை

புக்கிட் பாத்தோக்கில் எல்லா நீர்க்குழாய்களிலும் சோதனை

1 mins read

புக்கிட் பாத்தோக்கில் தண்ணீர்க் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது குறித்து விசா ரணைகள் தொடர்ந்து வருகின் றன. இந்நிலையில், அக்குழாய்களில் துருப்பிடித்திருந்தது முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, புக்கிட் பாத் தோக்கில் மொத்தமுள்ள 1,100 கி.மீ. நீள தண்ணீர்க் குழாய்களி லும் சோதனை நடத்தப்பட இருப்ப தாக கழகத்தின் நீர் விநியோகப் பிரிவு இயக்குநர் மைக்கல் டோ கூறியுள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதியும் இம்மாதம் 1ஆம் தேதியும் புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் இரு வேறு இடங்களில் தண்ணீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடிக்க, அந்தப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது போல காட்சியளித்தது.