தெம்பனிசில் உள்ள 'கரிஸ்ஸா பார்க்' கூட்டுரிமை வீடுகளின் ஏழாவது மாடியிலிருந்து இந்தோ னீசியப் பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சன்னலைத் துடைத்துக் கொண்டிருந்தபோது நிலை தவறி அவர் கீழே விழுந்ததாக 'ஷின் மின்' செய்தி கூறியது. இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் நண்பகல் 12.05 மணியளவில் தகவல் கிடைத்ததும் அவசர மருத்துவ வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்த தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இருபதுகளில் இருந்த அந்தப் பெண் சாங்கி பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அந்தப் பணிப்பெண் கடந்த ஒரு மாதமாகத்தான் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக அவருடைய முதலாளி தெரிவித் தார். மேலும், சம்பவம் நிகழ்ந்த போது முதிய பெண்மணி ஒரு வரைத் தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும் அவர் சொன்ன தாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்து பணிப்பெண் காயம்
1 mins read

