போலி இணையத்தளம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் எச்சரிக்கை

போலி இணையத்தளம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் எச்சரிக்கை

1 mins read

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பெயரில் போலி இணையத்தளம் ஒன்று இருப் பதாகவும் வருகையாளர்களின் விசா குறிப்பு எண்களையும் கடவுச்சீட்டு எண்களையும் கள வாடும் முயற்சியில் அது ஈடு பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. www.singaporeonline-epass. com என்பது அந்த போலி இணையத்தளத்தின் முகவரி என குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்து உள்ளது. பொதுமக்கள் இந்த மோசடியில் சிக்கிவிடாமல் இருக்க இணையத் தள முகவரியை பயன்படுத்து நன்கு சோதித்துப் பார்த்த பின்னர் பயன்படுத்துமாறு ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் தகவல் களுக்கும் www.ica.gov.sg என் னும் ஆணையத்தின் அதிகாரத் துவ இணையத்தளத்தையே அனைவரும் நாடுமாறும் அது தெரிவித்துள்ளது. ஆணையத்தின் அதிகாரத்துவ இணையத்தளத்தை பயன்படுத்து வது பாதிக்கப்படவில்லை என்றும் எந்த ஒரு தரவும் சீர்குலைக்கப் படவில்லை என்றும் ஆணையம் உறுதி அளித்துள்ளது.