வில்சன் சைலஸ்
ஜூரோங் தீவின் ஆலையில் பயன்படுத்தப்பட்ட இயற்கை எரி வாயுவை முற்றிலும் நிறுத்தியதன் மூலம் $2.5 மில்லியனைச் சேமிக்க வழிவகுத்த 'ஏக்ட்சிஸ்ட்ஸ் பிரோ செஸ்' எனும் நிர்வாக ஆலோசனை கள் வழங்கும் நிறுவனம், 2017ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த எரி சக்தி நிர்வாகி என்ற விருதைப் பெற்றுள்ளது. இத்துடன், கழிவு எரிவாயு, கழிவுத் திரவங்கள் எரிக்க சிறப்பு 'பர்னர்'களை ஜூரோங் தீவின் ஆலைக்குப் பரிந்துரை செய்த நிறுவனம், வேறொரு ஆலையும் நீராவி நுகர்வை 17 விழுக்காடாக குறைப்பதற்கு தனது பரிந்துரைகள் மூலம் கைகொடுத்துள்ளது.
சுற்றுப்புறத்துக்கு உகந்த விதத்தில் எரிசக்தியைப் பயன் படுத்த உதவிய 'ஏக்ட்சிஸ்ட்ஸ் பிரோசெஸ்' நிறுவனம் உட்பட 12 நிறுவனங்களுக்கு நேற்று எரிசக்தி செயல்திறன் தேசிய பங்காளித்துவ விருதுகள் வழங்கப்பட்டன. சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடை பெற்ற தேசிய எரிசக்தி செயல் திறன் மாநாட்டில் 'சிறந்த எரிசக்தி நிர்வாகம்', 'சிறந்த பழக்கங்கள்', '2017ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த எரிசக்தி நிர்வாகி' ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங் கப்பட்டன. தேசிய சுற்றுப்புற வாரியம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், எரிசக்தி சந்தை ஆணையம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் ஏழாவது முறையாக வழங்கப்படும் இந்த விருதுகளில் '2017ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த எரி சக்தி சேவைகள் வழங்கும் நிறுவ னம்' என்ற புதுப் பிரிவும் இடம்பெற்றுள்ளது.
சிறந்த எரிசக்தி நிர்வாகத்துக்கான விருதுடன் சிறந்த பழக்கங் களுக்கான விருதையும் பெற்றுக்கொண்ட 'எக்ஸ்சோன்மொபில்' ஆசியா பசிபிக் நிறுவனம். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

