தீட்டப்படாத அரிசி பற்றிய தகவல்களை ஆறு மாத விழிப்புணர்வு பிரசாரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவுள் ளது, என்டியூசி ஃபேர்பிரைஸ் நிறுவனம். மேலும் நேற்று முதல் என்டியூசி ஃபேர்பிரைஸில் தீட்டப் படாத அரிசி வாங்குவோருக்கு விலைக்கழிவும் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த துவங்கப் பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, மக்கள் எளிய முறையில் தீட்டப் படாத அரிசிக்கு தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஏது வாக இத்தகைய முறையை அந்த கடைத் தொகுதி கையாளுகிறது. நீரிழிவு நோய் பற்றிய விழிப்பு ணர்வு, பிரதமர் லீ சியன் லூங்கின் தேசிய தின பேரணியில் சுட்டிக் காட்டப்பட்டது. நீரிழிவு நோய் சிங்கப்பூரில் ஒரு சுகாதார நெருக் கடியாக வகை செய்யப்பட்டுள்ளது. பொது விழிப்புணர்வு பிரசாரத் தின் அங்கமாக ஃபேர்பிரைஸ் நேற்று முதல் இம்மாதம் 18ஆம் தேதி வரை தீட்டப்படாத அரிசி வாங்குவோருக்கு 10 விழுக்காடு கழிவு வழங்குகிறது.
என்டியூசி ஃபேர்பிரைசில் தகவல் சுவரொட்டிகளோடு வைக்கப் பட்டுள்ள தீட்டப்படாத அரிசி வகைகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

