முறைத்துப் பார்த்ததால் கத்திக்குத்து

முறைத்துப் பார்த்ததால் கத்திக்குத்து

1 mins read

மாறி மாறி முறைத்துக்கொண்ட சம்பவங்கள் ஒருவர் இன்னொருவரைக் கத்தியால் குத்தும் அளவுக்குக் கொண்டு சென்றன. பகுதி நேரமாக வண்ணம் பூசும் வேலை செய்து வந்த திரு பாங் கோக் பெங், 58, என்ற ஆடவரைப் பலமுறை கத்தியால் குத்திய ஆலன் இயோ ஹூய் ஹுவாட், 66, என்ற வேலையில்லா ஆடவருக்கு 43 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திரு பாங்கும் ஆலனும் பல ஆண்டுகளாக அருகருகே வசித்து வந்தனர். இருந்தாலும் இருவரும் அவ்வப்போது முறைத்துக்கொள்வது வழக்கமாக இருந்துவந்துள்ளது. இதேபோல கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, சாய் சீ அவென்யூ புளோக் 38ன் கீழ்த்தளத்திலுள்ள பொதுவெளியில் அமர்ந்திருந்த ஆலன் திரு பாங்கை முறைத்துப் பார்த்துள்ளார். அதைக் கண்ட திரு பாங், "ஏன் முறைத்துப் பார்க்கிறாய்?" என்று ஆலனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து தான் வைத்திருந்த பழக் கத்தியால் ஆலன் திரு பாங்கைப் பலமுறை குத்தியதாகக் கூறப்பட்டது.