$138,000 மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை

$138,000 மோசடி செய்தவருக்கு ஓராண்டு சிறை

1 mins read

விற்பனைகளுக்கான தரகுத் தொகை என்று கூறி தாம் பணி ஆற்றிய நிறுவனத்தின் நிர்வாக எழுத்தரை ஏமாற்றி $138,103 பணத்தை மோசடி செய்த நிர் வாகிக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென் சென் சாங், 44, என்ற ஆடவர் கடந்த மூன்று ஆண்டு களாக '9&நைன்' என்ற வர்த்தக சமையலறைச் சாதனங்களை விநி யோகிக்கும் நிறுவனத்தை இப்படி பலமுறை ஏமாற்றியதாகக் கூறப் பட்டது. தைவான் நாட்டைச் சேர்ந்த வரான சென் $66,000 தொகை தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றசாட்டுகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒப்புக்கொண் டார். அந்தப் பணம் முழுவதையும் அவர் திருப்பியளித்துவிட்டார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான சென், 18 ஆண்டுகளாக '9& நைன்' நிறுவனத்தில் பணியாற்றிய பின் சென்ற 2015ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார்.