முதல்வர்கள், மூத்த ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி, ஊக்கத்தொகை

முதல்வர்கள், மூத்த ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி, ஊக்கத்தொகை

1 mins read

புதிய மூன்றாண்டு 'தலைவர்களுக் கான நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டத்தில்' பங்கெடுக்கத் தேர்வு பெறும் பாலர் பள்ளி முதல்வர் களுக்கும் மூத்த ஆசிரியர்களுக் கும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்; ஊக்கத் தொகையும் அளிக்கப்படும். நிறுவன, பாடத்திட்ட தலை மைத்துவத்தில் தரமான நடை முறைகளைக் கையாண்டு தங் களது கல்வி நிலையங்களை வழி நடத்த அவர்களுக்கு இந்தத் திட்டம் கைகொடுக்கும்.

பயிற்சி, மற்ற பாலர் பள்ளித் தலைவர் களுடன் நிபுணத்துவப் பகிர்வு, கற்றல் பயணங்கள் எனப் பல வகையான கற்றல் வாய்ப்புகள் அவர்களுக்குக் கிடைக்கும். பாலர் பருவ மேம்பாட்டு அமைப் பால் சன்டெக் மாநாட்டு, கண் காட்சி மையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்திர பாலர் பருவ மாநாட்டில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிகழ் வில் 1,200க்கு மேற்பட்ட பாலர் பள்ளி கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் பல திட்டங்களை அறிவித்த அமைச்சர் லீ, பாலர் கல்வித் துறையில் அதிகமானோர் சேரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.