மத்திய போதைப்பொருள் ஒழிப் புப் பிரிவு வெள்ளிக்கிழமை மேற் கொண்ட நடவடிக்கையின் விளைவாக சுமார் $109,-000 மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் குற்றவாளி கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பிடிபட்டு இருக் கிறார்கள். ஹாலண்ட் ரோட்டில் இருக்கும் ஜெலிட்டா ஷாப்பிங் சென்டர் அருகே இருந்த இரண்டு அதிகாரிகள், 41 வயது ஆடவர் ஒருவர், 26 வயது மலேசியருடன் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தார்கள். பிறகு அந்த மலேசியர், அந்த கடைத்தொகுதிக்குள் நுழைந் தார். சிங்கப்பூரரான மற்றோர் ஆடவர் தன் வாகனத்தில் காத் துக்கொண்டிருந்தார். இந்த ஆடவர் கிம் மோ லிங்க் அருகே கைதானார். சுமார் 435 கிராம் ஹெராயின், 213 கிராம் ஐஸ் ஆகியவற்றை அதிகாரிகள் டோவர் எம்ஆர்டி நிலையம் அருகே பாதையில் இருந்ததைக் கண்டனர்.
போதைப்பொருள் சிக்கியது; சந்தேகத்தின்பேரில் மூவர் கைது
1 mins read

