லெங் கீ சமூக மன்றம் இரண் டாண்டு புதுப்பிப்புக்குப் பிறகு இப்போது கதவைத் திறந்திருக்- கிறது. குயீன்ஸ்டவுன் பேட்டை- யில் வசிக்கும் 47,000 மக்களுக்கு அந்த மன்றம் இப்போது முன்னிலும் சிறந்த வசதியை வழங்கத் தயாராகி இருக்கிறது. பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் திறப்புவிழாவில் கலந்துகொண்டார். "இந்த மன் றத் தைச் சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புப் பேட்டை முதிர்ச்சி யடைந்த பேட்டை என்றாலும் கடந்த சில ஆண்டுகளில் இங்கு புதிய அடுக்குமாடி வீடுகள் கட் டப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இளம் குடும்பங்கள் குடியேறுகின்றன," என்று அமைச் சர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே கடந்த இரண்டாண்டு காலமாக இந்தச் சமூக மன்றம் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
பல வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட லெங் கீ சமூக மன்றத்தை பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று திறந்து வைத்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

