மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கும் பீஷான் காப்பிக்கடை

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைக்கும் பீஷான் காப்பிக்கடை

2 mins read
095f3457-2307-4baf-8ad8-21afeafcfe48
-

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்- களை அடையாளம் கண்டு அவர் களுக்கு நட்பார்ந்த சேவை வழங்- கும் வகையில் காப்பிக்கடை ஒன்று புதிய வடிவமைப்புடன் தோற்றம் அளிக் கிறது. பீஷான் ஸ்திரீட் 13, புளோக் 511ல் உள்ளது அந்த காப்பிக்கடை. கிம் சாங் லெங் கோப்பித்தியாம் என்ற அக்கடையில் உள்ள மேசை களில் அங்கு விற்கப்படும் உண- வுகளின் படங் களும், வாசகங்- களும் பெரிய அளவில் அச் சிடப்பட்டுள்ளன. மறதி நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நாணயங்களை எளி தில் அடையாளம் காண முடியாது. அவ்வகையில் நாணயங்களின் வடிவங்களும் உணவு மேசை களில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் படங்களும் வாசகங் களும் மறதி நோயால் பாதிக்கப் பட்டவர்களை நமக்கு நினை வூட்டும். நாம் அவர்களை மறந்து விடக்கூடாது. அவர்களை எளி தில் அடையாளம் கண்டு அவர் களுக்கு உதவ முன்வரவேண்டும். அவர்களிடம் அன்பாகவும் நட்பார்ந்த முறையிலும் மரியாதை யாகவும் பேச வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டே அந்த காப்பிக் கடை யில் இதுபோன்ற படங்களும் வாசகங்களும் மேசைகளில் அச்சிடப்பட்டுள்ளன. மறதி நோயால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அர வணைக்கும் வகையில் காப்பிக் கடைக்கு புதிய வடிவம் கொடுத்த முதல் காப்பிக் கடை இது என்று கூறப்படுகிறது. மறதி நோயுள்ளவர்கள் சில நேரங்களில் தாங்கள் கேட்டிருந்த படி உணவு பரிமாறப்படவில்லை என்று எண்ணக்கூடும்.

இதுபோன்ற வாடிக்கையாளர் களுக்கு நல்லமுறையில் சேவை வழங்கும் நோக்கில் அந்தக் கோப்பிக் கடையில் உள்ள 15 உணவுக் கடைக்காரர்களுக்கும் ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது. பீஷான் ஸ்திரீட் 13, புளோக் 511ல் உள்ள கிம் சாங் லெங் கோப்பித்தியாம் கடை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்