'கட்சியில் தனது நிலையை வலுப்படுத்த சசிகலா திட்டம்'

'கட்சியில் தனது நிலையை வலுப்படுத்த சசிகலா திட்டம்'

1 mins read

தற்போதைய தமிழக அரசியல் சூழலில் அதிமுகவில் இழந்த தனது பிடியை இறுக்கிக்கொள்ள வும் தனிக்கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ள தினகரனை ஓரம் கட்டவும்தான் சசிகலா பரோலில் வந்திருப்பதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகின்றனர். நேற்று முன்தினம் பெங்களூரு சிறையிலிருந்து கார் மூலம் சென்னை வந்தடைந்த சசிகலா வுடன் தினகரனும் பயணம் செய் ததாகக் கூறப்பட்டது. நேற்று பிற் பகல் 12 மணிக்கு மருத்துவ மனைக்குச் சென்று கணவரைப் பார்த்தார் சசிகலா. கணவரின் உடல்நலம் குறித்து கண்ணீர் மல்க சசிகலா விசாரித்தார் என்று கூறப்பட்டது. செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் இருக் கும் நடராசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை வரை மருத்துவ மனையில் இருக்க மருத்துவமனை அனுமதி அளித்தபோதும் சுமார் இரண்டு மணி நேரம் மட்டுமே அங்கிருந்த சசிகலா தி.நகர் திரும்பினார். தன்னுடைய கவனத்துக்குக் கொண்டுவராமல் தினகரனால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகளால்தான், கட்சியில் தமது நிலை இப்படி ஆகியிருப்ப தாக சசிகலா எண்ணுகிறார்.