சிங்கப்பூரில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக தோ பாயோ எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கும் பிராடல் நிலையத்திற்கும் இடை யில் சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வடக்கு-தெற்கு ரயில் வழித்தடத்தின் பெரும் பகுதி செயல்பட முடியாமல் பாதிக்கப்பட்டது. ரயில் தண்ட வாளங்களில் வெள்ளம் ஏற்படா மல் இருப்பதை உறுதிப்படுத்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் அண்மையில் மேம்படுத்தப்பட்டன. இருந்த போதிலும், நேற்று சுரங்கப்பாதை யில் தண்ணீர் புகுந்துவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி வித்தது. அங் மோ கியோ நிலையத் திற்கும் மரினா சவுத் பியர் நிலையத்திற்கும் இடையில் ரயில் சேவை இல்லை என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று அறிவித்தது. தண்டவாளக் கோளாறே அதற்குக் காரணம் என்று அது தெரிவித்தது. இரண்டு நிலையங்களுக்கும் இடையில் இலவச பேருந்துச் சேவை இருப்பதாகவும் அது குறிப்பிட்டது. சுரங்கத் தண்டவாளத்தில் வெள்ளம் புகுந்தது ஒருபுறம் இருக்க, மரினா பே நிலையத்திற்கும் ராபிள்ஸ் பிளேஸ் நிலையத்திற்கும் இடை யில் சுரங்கப்பாதையில் நேற்று தீ மூண்டது. அது உடனடியாக அணைக்கப்பட்டது.
ரயில் சேவையில் கடுமையான பாதிப்பு
1 mins read

