'தீவிரவாதம் வேண்டாம்' எனும் பிரசாரங்கள் சில நேரங்களில் அசௌகரியமானதாக இருந்த போதும் அதற்கான பலன் கிடைத்து இருக்கிறது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகமும், முஸ்லிம் சமூகத் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். சமூகங்களைப் பிரிக்கக்கூடிய நடைமுறைகளைச் சிங்கப்பூரர் களால் நிராகரிக்க முடியும் என்று தீவிரவாதத்துக்கு எதிரான இன்னும் உறுதியாக இருக்க முஸ்லிம் சமூகத்துக்கு உதவுவது தொடர்பான நேற்றைய கருத் தரங்கு ஒன்றில் அவர்கள் மேலும் தெரிவித்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான பிரசாரம் "ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. தீவிரவாதக் கருத்து களை ஆதரிக்கும் சிறிய குழுக் களும் அமைதியாக இருக்கின் றன," என்று 270 சமய ஆசிரியர் கள், சமூகத் தலைவர்கள் ஆகி யோரிடையே பேசிய திரு சண் முகம் கூறினார். ஒரு குறிப்பிட்ட உளவியல் நீள்திறன் நிலையை சிங்கப்பூர் எட்டி இருப்பதையே இந்த அறிகுறி கள் காட்டுகின்றன எனவும் அவர் சொன்னார்.
தீவிரவாத மனப்போக்கை தடுக்கும் முயற்சியால் பலன்
1 mins read

