தீபாவளி வந்துவிட்டால் பண்டி கைக்குத் தேவையான பொருட் களை வாங்க கிண்டா சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தைக்கு வாடிக் கையாளர்கள் செல்வது வழக்கம். பலகாரங்கள், பாரம்பரிய இந்திய உடைகள், ஆடை அணிகலன்கள், வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், மருதாணி இடும் சேவைகள் என அனைத்தும் ஒரே கூரையில் கிடைக்கும் தளமாக இச்சந்தை விளங்கி வந்துள்ளது. இவ்வாண்டின் தீபாவளிச் சந்தையில் நுழைந்தபோது அதன் முகப்பில் இத்தகைய அம்சங்கள் தெரிந்தன. ஆனால் சந்தைக்குள் செல்லச் செல்ல பண்டிகை உணர்வும் குறையத் தொடங்கியது. சந்தையின் நடுப்பகுதியில் விளை யாட்டுப் பொருட்கள், கைபேசி உறைகள், சிறுவர் ஆடைகள், பைகள், பணப்பைகள் என சாதாரண இரவு சந்தையில் (pasar malam) இருக்கும் உணர்வே ஏற்பட்டது. கைபேசிகளும், அவற்றின் பயன்பாடு தொடர்பான பொருட் களும் விற்கும் குறைந்தபட்சம் 9 கடைகள் சந்தையில் இருந்தன.
கிண்டா சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தீபாவளிச் சந்தை. படம்: திமத்தி டேவிட்

