அதிபர் ஹலிமாவின் தேர்தல் பிரசார செலவு $220,875

அதிபர் ஹலிமாவின் தேர்தல் பிரசார செலவு $220,875

1 mins read

அதிபர் ஹலிமா யாக்கோப் தனது தேர்தல் பிரசாரத்திற்கு மொத்தம் $220,875 செலவிட்டார். தேர்தல் துறை நேற்று வெளியிட்ட பத்திரங்கள் இந்த விவரங்களைக் காட்டுகின்றன. இதில் $198,154 தொகை விளம்பரத்திற்கும் பிரசுரங்களுக் கும் செலவிடப்பட்டது. அதிபர் ஹலிமா $73,000 செலவில் 20,110 பிரசார சுவரொட்டிகளை அச்சிட்டார். பிரசாரத்தின்போது பயன்படுத் தப்பட்ட 200 பிவிசி வாசகக் கொடிகளுக்கு மட்டும் $20,000 செலவானது. $34,000 செலவில் 1.28 மில்லியன் அட்மெய்ல் ஏ5 அட்டைகள் உருவாக்கப்பட்டன. அவரைப் பற்றிய காணொளி ஒன்றும் $29,000 செலவில் தயா ரிக்கப்பட்டது. அதிபர் தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் பிரதான தேர்தல் முகவர்கள் ஒரு பிரக டனத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.