ஒரு நான்கு வயது பையனுக்கு ஒவ்வாமை காரணமாக கடுமை யான பாதிப்பு ஏற்பட்டது. மருத்து வர் ஒருவர் விரைவாகச் செயல் பட்டு அந்தப் பையனைக் காப் பாற்றினார். டாக்டர் லாய் யிரோங் என்ற அந்த மருத்துவர் வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு யுனைட்டட் ஸ்கொயரில் தான் நடத்தி வரும் தனியார் மருந்தகத்திலிருந்து வீட் டுக்குப் புறப்படவிருந்த நேரத்தில் ஒரு மாது தன்னுடைய நான்கு வயதுப் பயனை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக வந்தார். "அந்தப் பையன் இருமினான். இருமல் சத்தம் வித்தியாசமாக இருந்தது. மூச்சுவிட அவன் சிரமப்பட்டது தெரிந்தது. ஒவ்வாமை காரணமாக பையனுக் குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதி னேன். உடனடியாக அதற்குத் தகுந்த சிகிச்சை அளித்தேன்," என்றார் மருத்துவர். பிராக்ஸ்டன் ஓங் என்ற அந்தப் பையன் கொஞ்ச நேரத்தில் வழக்கமாக மூச்சுவிடத் தொடங்கி னான். அந்தப் பையனின் உடல் முழுவதும் சிராய்ப்புக் காயத்தைப் போல் சிவந்திருந்தது. சொரிந்து கொண்டே இருந்தான் என்று அந்தப் பையனின் தந்தை ஸ்டிவ் ஓங் கூறினார்.
விவேக சிகிச்சை: பையனைக் காத்த மருத்துவர்
1 mins read

