தஞ்சோங் பகார்=தியோங் பாரு பகுதியில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் வசதி குறைந்த சுமார் 120 இந்தியக் குடும்பங் களுக்குச் சனிக்கிழமை தீபாவளி 'அங்பாவ்வும்' உணவுப் பொருட் களும் வழங்கப்பட்டன. சட்ட, நிதி மூத்த துணை அமைச்சரும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகள் ஆலோசகருமான குமாரி இந்திராணி ராஜா கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினார்.
ஆரோக்கியமான உணவு முறையை ஆதரிக்கும் நோக்குடன் பலசரக்குப் பொருட்களுடன் பச்சை காய்கறிகள், ஆப்பிள், கொய்யா பழங்கள் மற்றும் சர்க் கரை இல்லாத உடனடி காப்பித் தூள் என 15க்கும் மேற்பட்ட பொருட்கள் முதன் முறையாகக் கொடுக்கப்பட்டன. நீரிழிவு நோயுடையோர் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்குக் கூடுதலாக ஓட்ஸ், தானிய ரொட்டி போன்ற பொருட்கள் வழங்கப் பட்டன. இந்த அங்பாவ்களையும் உண வுப் பொருட்களையும் ஹார்ட் வார்மர்ஸ்' என்ற தொண்டு நிறு வனம் தீபாவளி அன்பளிப்பாக வழங்கியது.
சட்டம், நிதி மூத்த துணை அமைச்சர் குமாரி இந்திராணி ராஜா தீபாவளி அன்பளிப்பை வழங்குகிறார். படம்: தஞ்சோங் பகார் இந்திய நற்பணிக் குழு

