ஜூரோங்கில் வசிக்கும் மக்களுக்கு இப்போது மேலும் பல வகை உணவு கிடைக்கவிருக்கிறது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 61ல் அமைந்திருக்கும் புதிய சந்தை அங்காடி நிலையம் நேற்று திறக் கப்பட்டது. அதில் சமைத்த உணவை விற்கும் 34 கடைகளும் 14 சந்தைக் கடைகளும் உள்ளன. மொத்தம் 500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவுக்கு இருக் கும் அந்த நிலையத்தை 'ஹாக்கர் மேனஜ்மெண்ட்' என்ற சமூக நிறு வனம் லாபநோக்கற்ற அடிப்படை யில் நடத்துகிறது.
விலையைக் குறைத்து வைத் திருப்பது, கிடைக்கும் லாபத்தை அந்த நிலையத்திற்கும் சமூகத்திற் கும் பயன்படுத்துவது ஆகியவை இதன் நோக்கம். சிங்கப்பூரில் அங்காடி நிலையங்களில் தாக்குப் பிடிக்கத்தக்க விலையில் சமைத்த உணவு கிடைக்க வேண்டும். அங்காடி நிலையங்களின் நடை முறை ஆற்றல் மேம்பட வேண்டும். இதைச் செய்ய சமூக உணர்வுடன் கூடிய நிர்வாகம் அந்த நிலையங் களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
ஜூரோங் வெஸ்ட் அங்காடி நிலையத்தில் சுகாதார, சுற்றுப்புற, நீர்வள, மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் ஓர் இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கிறார். இந்தப் புதிய அங்காடி நிலையத்தை லாப நோக்கற்ற அடிப்படையில் ஹாக்கர் மேனஜ்மெண்ட் என்ற நிறுவனம் நிர்வகித்து நடத்துகிறது. படம்: ஹாக்கர் மேனஜ்மெண்ட்

