10,000 வீவக வீடுகளுக்கு திறன்வாய்ந்த குளியல் 'ஷவர்'

10,000 வீவக வீடுகளுக்கு திறன்வாய்ந்த குளியல் 'ஷவர்'

1 mins read
e7cd8ca6-9108-4896-a5ce-52c93aed5b76
-

தேவைக்கு ஏற்ப கட்டப்படும் 10,000 புதிய வீவக வீடு களில் 2018ஆம் ஆண்டின் முற்பகுதியில் திறன்வாய்ந்த குளியல் 'ஷவர்' பொருத்தப் படும் என்று தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது. இத்தகைய திறன் ஷவர்களை ஆம்பிரோ, ஸ்மார்ட் & புளு ஆகிய இரு நிறுவனங்கள் தயாரித்து விநியோகிக்க விருக்கின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் தலா 10,000 சாதனங்களைத் தயாரிக்கும். எந்த வீடுகளுக்கு நவீன ஷவர் பொருத்தப்படுவது என்பது குறித்து வீவக இறுதி செய்து வருகிறது.