ரயில் சேவையில் தடை; அதிக நடவடிக்கைகள் தேவை

ரயில் சேவையில் தடை; அதிக நடவடிக்கைகள் தேவை

1 mins read
e83726f5-46e8-45c8-a6c2-fc57692e2a6c
-

வடக்கு-தெற்கு ரயில் தடத்தின் சுரங்கப் பாதையில் நீரை வெளியேற்றும் கருவிகள் பழுதடைந்து ரயில் சேவை தடைப்பட்ட சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து நிபுணர்கள் கூறியுள்ளனர். கூடுதல் சோதனைகளும் மாற்று செயல் கட்டமைப்பும் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க உதவும் என்று நிபுணர்கள் கருத்துரைத்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.

சனிக்கிழமை அன்று வடக்கு-தெற்கு ரயில் தடத்தில் 13 நிலையங்களுக்கு ரயில் சேவை தடைப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். கோளாறு சரிசெய்யப்பட 21 மணி நேரம் ஆனது. பீஷான் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே தரைப் பாதையைம் சுரங்கப் பாதையையும் இணைக்கும் பகுதியில் வெள்ள நீர் புகுந்துவிட்டது ஆரம்ப கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது.