ராணுவ வீரர்கள் கடுமையான, நடைமுறைப் பயிற்சிக்கு உட்படுத் தப்பட்டாலும் பாதுகாப்புக்கு இன் னமும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். 'வாலபி' ராணுவப் பயிற்சியில் பங்குபெறும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்களைப் பார்வையிட ஆஸ்திரேலியா சென்றிருந்த போது அமைச்சர் ஓங் இவ்வாறு கருத்துரைத்தார். இந்த 'நிலையான இக்கட்டை' சமாளிக்க படைத்தலைவர்களும் அவர்களது படைப்பிரிவுகளும் பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள் என்றார் திரு ஓங். சிரமமான ராணுவப் பயிற்சி களில் இடர்ப்பாடுகள் எப்போ துமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆனால் சரியான தடுப்பு நடவடிக்கைகள், சரியான பயிற்சி ஆகியவற்றுடன் இந்த இடர் களைக் குறைக்கவும் முற்றிலும் நீக்கவும்கூட முடியும்," என்றார் திரு ஓங். சுமார் ஒரு மாதத்திற்குமுன், 'வாலபி' பயிற்சியின் முந்திய கட்டத்தில், பயோனிக்ஸ் கவச வாகனம் பக்கவாட்டில் சாய்ந்த தில் முழுநேர தேசிய சேவை யாளரான மூன்றாம் சார்ஜண்ட் கெவின் சான் உயிரிழந்தார்.
'ஷோல்வாட்டர் பே' பயிற்சி வட்டாரத்தில் சிங்கப்பூர் ராணுவத்தினரின் 'வாலபி' பயிற்சியை முதல்முறையாக நேரில் பார்வையிட்ட இரண்டாம் தற்காப்பு அமைச்சர் ஓங் யி காங் (வலது) 'பயோனிக்ஸ்' கவச வாகனத்தில் பயணம் செய்து பார்த்தார். படம்: சாவ் பாவ்

