வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைய 25 ரிங்கிட் அனுமதிக் கட்டணம்

வெளிநாட்டு வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைய 25 ரிங்கிட் அனுமதிக் கட்டணம்

1 mins read
dc83f7e2-0ad0-4349-b77b-0cfb20665e5f
-

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மலேசியாவுக்குள் நுழைய வாகன நுழைவு அனுமதிக் கட்டணமாக 25 மலேசிய ரிங்கிட் (S$8.06) செலுத்தும் நடைமுறை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ளது என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் லியோவ் டியோங் லை தெரிவித்துள்ளார். ஒருமுறை பெறப்படும் வாகன நுழைவு அனுமதி ஐந்தாண்டு களுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். நுழைவு அனுமதி பெற்றதற்கு அடையாளமாக வழங் கப்படும் 'ஆர்எஃப்ஐடி' எனும் அடையாள வில்லையை வாகன உரிமையாளர்கள் தங்களது வாக னங்களின் முன்புறக் கண்ணாடி யில் வைத்திருக்க வேண்டும். "மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்களின் எண்ணிக்கையை அடையாளம் காண இந்த வாகன நுழைவு அனுமதி எங்களுக்கு உதவும். அத்துடன், கார் திருட்டையும் திருடப்பட்ட கார்களின் அடையா ளங்களை மாற்றியமைப்பதையும் தடுக்க முடியும்," என்று அமைச்சர் லியோவ் தெரிவித்தார்.