உள்ளூர் ஊழியர்களுக்கு உதவி

உள்ளூர் ஊழியர்களுக்கு உதவி

1 mins read

சிங்கப்பூரில் இல்லாத திறன் களையும் அறிவாற்றலையும் உள் ளூர் தொழிலாளர்களுக்குக் கற்றுக்கொடுக்க வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களிடம் உதவி நாடிச்செல்லும் நிறுவனங்கள் இப்போது புதியதொரு திட்டத் தைப் பயன்படுத்தலாம். வெளிநாட்டு, உள்நாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், உள்ளூர் பயிற்சியாளர்கள் ஆகியோரின் சம்பளத்திற்கும் பயிற்சிக்கும் 30 -90% வரை நிதியளிக்கும் முன் னோட்டத் திட்டத்தை மனிதவள அமைச்சுத் தொடங்கியிருக்கிறது. வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி பெறுவதற்கும் இந்நிதி உதவும். மனிதவளத்தை நிறுவனங் கள் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது பற்றிய ஆய்வரங்கில், மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே "ஆற்றல் வளர்ப்புத் திட் டத்தை" நேற்று அறிவித்தார். வெளிநாடுகளின் திறனாற்ற லால் பயனடைய விரும்பும் நிறு வனங்கள், துறைகள் ஆகிய வற்றுக்கு அவர் எடுத்துக் காட்டுகள் கூறினார். உட்புற அலங்கரிப்புத் தொழில் துறையிலுள்ள ஒரு நிறுவனம் சுகாதாரப் பராமரிப்புப் பொருட் களின் உற்பத்தியில் ஆற்றலை வளர்த்துக் கொள்ள விரும்பலாம்.