புக்கிட் பாத்தோக் விபத்தில் நான்கு வயது சிறுமி மரணம்

புக்கிட் பாத்தோக் விபத்தில் நான்கு வயது சிறுமி மரணம்

1 mins read
4264b348-7da1-46b8-bb2c-9b6087ac0357
-

புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயி ரிழந்தார். இதன் தொடர்பில் 53 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் சிறுமியுடன் 37 வயது பெண்ணும் காயம் அடைந்தார். திங்கட்கிழமை அன்று புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 2ல் நிகழ்ந்த விபத்து குறித்து மாலை 6.41 மணி அளவில் தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களை அங்கு அனுப்பி யிருந்தது. விபத்தில் சிக்கிய சிறுமி சுயநினைவின்றிக் கிடந்தார். உடனே ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டாள். அதே சமயத்தில் சிறுமிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டியது குறித்தும் மருத்துவ மனைக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத் தில் சிறுமி மரணமடைந்தார். அதே மருத்துவமனையில் சுய நினைவுடன் சேர்க்கப்பட்ட பெண் ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.