தனியார் அடுக்குமாடி வீடுகளின் மறுவிற்பனை விலை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் 0.1% கூடியது. செப்டம்பரில் ஆகஸ்ட்டைவிடக் குறைவான வீடுகளே கைமாறின என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆகஸ்ட்டில் வீடுகளின் மறுவிற்பனை விலை 0.7% உயரும் என்று இந்த நிறுவனம் தொடக்கத்தில் கணித்திருந்தது. ஆனால் அந்த உயர்வு 0.9% ஆக இருக்கும் என்று பிறகு அது திருத்தியது. சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நவம்பர் முதல் தனியார் வீடுகளின் மறுவிற்பனை விலை மீட்சிகண்டு வருகிறது. ஓராண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் இந்த விலை 4.3% அதிகம். இந்த ஆண்டு இதுவரையில் மறுவிற்பனை விலை 3.2% கூடியிருக்கிறது. செப்டம்பரில் 1,162 வீடுகள் கைமாறின. இந்த எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 1,304 ஆக இருந்தது.
தனியார் வீடு மறுவிற்பனை விலை 0.1 விழுக்காடு கூடியது
1 mins read

