புருணை தளபதிக்கு சிங்கப்பூரின் உயரிய விருது

புருணை தளபதிக்கு சிங்கப்பூரின் உயரிய விருது

1 mins read
8b04838f-e94e-42ed-be5e-309eb0dfa7a5
-

புருணை அரச கடற்படைத் தள பதிக்கு சிங்கப்பூரின் பெருமை மிக்க ராணுவ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தற்காப்பு அமைச்சில் நேற்றுக் காலை நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் புருணை யின் முதல் அட்மிரல் பெங்கிரான் நொராஸ்னி பெங்கிரான் ஹாஜி முகமதுக்கு தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், மெச்சத்தக்க சேவை விருதை (ராணுவம்) வழங்கிச் சிறப்பித்தார். சிங்கப்பூர் குடியரசு கடற் படைக்கும் புருணை அரச கடற் படைக்கும் இடையில் இருதரப்பு தற்காப்பு உறவை மேம்படுத்த புருணை தளபதி ஆற்றியிருக்கும் குறிப்பிடத்தக்க தொண்டுகளை அங்கீகரித்துச் சிறப்பிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது என்று தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

புருணையின் முதல் அட்மிரல் பெங்கிரான் நொராஸ்னி பெங்கிரான் ஹாஜி முகமதுக்கு (வலது) தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் விருது வழங்கினார். படம்: தற்காப்பு அமைச்சு