மின்னிலக்கமுறையில் கார் நிறுத்தப் பேட்டையில் கட்டணம் கட்ட வசதி

மின்னிலக்கமுறையில் கார் நிறுத்தப் பேட்டையில் கட்டணம் கட்ட வசதி

1 mins read
e11ad3e2-d0ea-4604-a780-d9e8bb5c384d
-

வாகனமோட்டிகள் நாளை முதல், பொது கார் நிறுத்தும் இடங்களில் கைபேசியில் பதிவிறக்கம் செய்த 'parking.sg' செயலி (படம்) மூலம் கட்டணங்களைச் செலுத்தமுடியும். இந்த 'parking.sg' செயலியை 'ஆப்பிள் பிளேஸ்டோர்', 'கூகள் பிளேஸ்டோரிலிருந்து' பதிவிறக் கம் செய்யலாம். பொது கார் நிறுத்தப் பேட்டை யில் கிட்டத்தட்ட 1,100 இடங்களில் மக்கள் தங்கள் கார்களை நிறுத்த தற்பொழுது தாள் கட்டணக் கூப் பன்களைப் பயன்படுத்துகிறார்கள். இனி வாகனமோட்டிகள் மின்னி லக்க முறையில் செயலி மூலம் கடன் அட்டை கொண்டோ, பற்று அட்டை கொண்டோ கட்ட ணத்தைச் செலுத்தலாம். கார்கள், இலகு ரக வாகனங் களுக்கு அறிமுகப்படுத்தப்பட் டுள்ள இச்சேவை, இவ்வாண்டு கடைசியில் மோட்டர் சைக்கிள், கனரக வாகனங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என்று நகர மறு சீரமைப்பு ஆணையம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அரசாங்க தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து நேற்று அறிவித்தன. மின்னிலக்க முறையில் கட் டண வசதி ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் தாள் கட்டணக் கூப்பன் களையும் பயன்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் தெளிவு படுத்தினர். இந்தச் செயலி 30 நிமிடங் களுக்கு உண்டான கார் நிறுத்தும் கட்டணத்தைத் தானாகவே கணக் கிட்டு வசூலிக்கும்.