வளங்களைச் சாதகமாக்க சேவைகள் இணைக்கப்படலாம்

வளங்களைச் சாதகமாக்க சேவைகள் இணைக்கப்படலாம்

1 mins read

புதிய ரயில்தடங்கள் திறக்கப்பட்ட பிறகு பேருந்து சேவைகள் இணைக்கப்படலாம், குறைக்கப்பட லாம் அல்லது பாதை மாற்றப்பட லாம். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பயண முறை உரு மாறி வருவதால், பேருந்து வளங் களைச் சாதகமாக்க இவ்வாறு செய்வது அவசியம் என போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார். மாற்றத்திற்கு உட்படும் பேருந்து பயணப் பாதைகளின் குடியிருப்பாளர்கள் இம்மாற்றத்தை வரவேற்பதில்லை என்றார் அவர். பேருந்து சேவைகளைத் தக்க வைக்குமாறு பொறுப்பமைப்புகளை 'வட்டாரக் குடியிருப்பாளர்கள் நெருக்குகிறார்கள்' என்றார் அவர். "ஆனால், குறைப்பதற்கான அவசியம் முக்கியமானது," என்று திரு கோ வலியுறுத்தினார். பயணி களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பேருந்து சேவைகளை நடத்துவதால் பொதுப் பேருந்து சேவைத் துறைக்கு அரசாங்கம் வழங்கும் மானியம் வீணாகிறது. கட்டணங்களிலும் இடையிடை யில் மாற்றம் செய்வது அவசியம் என்றார் திரு கோ. இதன்வழி, பொதுப் போக்குவரத்து மேம்பாடுக ளின் செலவுச் சுமையை வரி செலுத்துவோர் அளவுக்கதிகமாகச் சுமக்கத் தேவையில்லை. குறைவான காத்திருப்பு நேரம், அதிக சௌகரியமான பயணங்கள் போன்ற பேருந்து சேவை மேம் பாடுகள், வரி செலுத்துவோர் தாங் கிய பெரிய மானியங்களால் சாத் தியமானது என திரு கோ சுட்டிக் காட்டினார்.