சிங்கப்பூர் சமூக அறிவியல் பல் கலைக்கழகம் வரும் ஆண்டுகளில் சமூக அறிவியல் துறையில் இடம் பெறும் தன்னுடைய பாடபோதனைத் திட்டங்களை அதிகரிக்கும். தான் போதிக்கும் கல்வித்துறை கள் அனைத்திலும் சமூக, சமுதாய அம்சங்களை அது இடம்பெறச் செய்யும். வருங்காலத்தில் தொழில்நுட் பம், அறிவார்ந்த நகரமயம், மின் னிலக்க உருமாற்றங்கள் போன்ற பலவும் நம்முடைய வாழ்க்கையிலும் வேலையிலும் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளும். அதேவேளையில், அவையெல் லாம் தனிப்பட்டவர்களிடத்திலும் சமூகத்திலும் எத்தகைய விளை வுகளை ஏற்படுத்தும் என்பது சமூக அம்சங்களைப் பொறுத்தே இருக்கும். ஆகையால் இத்தகைய அம் சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைவர் திரு சியோங் ஹீ கியட் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் நேற்று அவர் 500 பட்டதாரிகளிடையே திரு சியோங் உரையாற்றினார்.
படிப்பில் சமூக அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம்
1 mins read

