சிங்கப்பூரில் ஆய்வு சோதனைச்சாலை அமைக்கிறது அலிபாபா நிறுவனம்

சிங்கப்பூரில் ஆய்வு சோதனைச்சாலை அமைக்கிறது அலிபாபா நிறுவனம்

1 mins read

கணினி இணைய வர்த்தகத்தில் உலகப் புகழ் பெற்ற அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆய்வு, உருவாக்கச் செலவினத்தை இரண்டு மடங்கிற்கு அதிகமாக்கும். அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை உருவாக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம் US$15 பில்லியன் (S$20.33 பில்லியன்) தொகையைச் செலவிடவிருக்கிறது.

மனித இயந்திரம் போன்ற செயற்கை அறிவுஜீவித் துறையில் ஈடுபடும் நோக்கத்தில் உலகம் முழுவதும் அந்த நிறுவனம் ஏழு ஆய்வுச் சோதனைச்சாலைகளை அமைக்கிறது. 100 அறிவியல் அறிஞர்களை வேலையில் சேர்க்கப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அலிபாபா டமோ அகடமி என்ற உலக ஆய்வுச் செயல் திட்டத்தைத் தான் தொடங்கப்போவதாக நிறுவனம் அறிவித்தது. அதன்படி சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளில் ஆய்வு பரிசோதனைச் சாலைகளை அந்த நிறுவனம் அமைக்கும்.