திறந்த, ஒருங்கிணைந்த பொருளியலுக்கு அடித்தளம்

திறந்த, ஒருங்கிணைந்த பொருளியலுக்கு அடித்தளம்

1 mins read

ஆசியான் நாடுகளுக்கிடையே தடையற்ற நிலவழி, கடல்வழி, ஆகாயவழி பயணத்துக்கு முயற்சி எடுக்கப்படுகிறது. ஆசியான் நாடுகளிடையே சுற்றுலாப் பேருந்துகள் பயணம் செய்வது எளிமைப்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார். மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற ஆசியான் போக்கு வரத்து அமைச்சர்களுக்கான கூட்டத்தில் அவர் நேற்று உரை யாற்றினார். ஆசியான் நாடுகளிடையே நிலவழி வாகனப் பயணிகளுக் கான எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்கும் கட்ட மைப்பு ஒப்பந்தத்தில் ஆசியான் உறுப்பியம் கொண்ட நாடுகளின் 10 போக்குவரத்து அமைச்சர்கள் இன்று கையெழுத்திடுவர் என்று திரு டியோ கூறினார்.

"திறந்த, ஒருங்கிணைந்த பொருளியலைக் கடைப்பிடிக்க ஆசியான் கொண்டிருக்கும் கடப்பாட்டையும் ஆசியான் மக்கள் அனைவரும் பலனடையும் வகையில் வர்த்தகம் தாராளமய மாக்கப்படுவதையும் அனைத் துலகச் சமூகத்துக்கு இது வலுவாகக் கோடிட்டுக் காட்டும்," என்று துணைப் பிரதமர் டியோ விளக்கினார். ஓர் ஆசியான் நாட்டிலிருந்து இன்னோர் ஆசியான் நாட்டுக்குச் சரக்குகள் கொண்டு செல்லப் படுவதை எளிமையாக்குவது தொடர்பான ஆசியான் கட்ட மைப்பு ஒப்பந்தத்தின் முதல் வடிவத்தை உறுதி செய்ய சிங்கப்பூர் தயாராக இருப்பதாக திரு டியோ கூறினார்.