வேலை நேரத்தில் திடீரென மார டைப்பு வந்ததால் மயங்கி விழுந்த பாதுகாவல் அதிகாரியின் மருத்து வச் செலவை அவர் வேலை செய் யும் கிளனிகல்ஸ் மருத்துவ மனையே ஏற்றுக்கொண்டது. கிளனிகல்ஸ் மருத்துவமனை யில் பாதுகாவலராகப் பணிபுரியும் தாமஸ் லூக்கோஸ், 55, செப்டம்பர் 12ஆம் தேதி இரவு நேர வேலை யின்போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக அந்த மருத் துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப் பட்டார். நிதியுதவி திரட்டும் இணையத் தளமான கிவ்.ஏஷியாவில் (Give. Asia) இது குறித்த தகவல் வெளி யிடப்பட்டது.
திரு லூக்கோசை மறுநாளே அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் தேசிய இதய நிலையத்திற்கு மாற் றம் செய்ய நினைத்தனர். ஆனால், திரு லூக்கோசின் காப்புறுதி ஒரு பகுதியின் செலவு களை மட்டுமே ஏற்றுக்கொண்டது. மேலும், இதய நிலையத்தில் இடப்பற்றாக்குறையாகவும் இருந் தது. எனவே, அவர் இதய அறுவை சிகிச்சையை கிளனிகல்ஸ் மருத் துவமனையிலேயே மேற்கொண் டார். லூக்கோசுக்கு அறுவை சிகிச்சை அளித்த டாக்டர் ஸ்ரீராம் ஷங்கர் எந்தவொரு கட்டணமும் விதிக்கவில்லை என்றாலும் மருத் துவமனைக்குச் செலுத்த வேண் டிய கட்டணம் 78,000 வெள்ளியை எட்டியது. இதில் $13,500யை திரு லூக்கோசின் வேலையிடக் காப்பு றுதி நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே, 'கிவ்.ஏஷியா' இணையத்தளம் நேற்றுக் காலை வரை 30,000 வெள்ளியைத் திரட் டியது.

