புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியைப் பராமரிக்க நியமிக் கப்பட்ட தனியார் தாதியை மான பங்கப்படுத்திய குற்றத்திற்காக தொழிலதிபர் ஒருவருக்கு நேற்று ஏழு மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட் டன. இந்தியாவைச் சேர்ந்த 47 வயது திரு பிள்ளை ஷியாம் குமார் சதாசிவன் என்பவரின் அச்செயல் அருவருப்பானது என்று மாவட்ட நீதிபதி மேத்யூ ஜோசஃப் சாடி உள்ளார். இச்சம்பவம் அந்தத் தாதி வேலை செய்யத் தொடங்கிய மூன் றாம் நாள் (2014 டிசம்பர் 14ஆம் தேதி) காலை 9.00 மணியளவில் கென்ட் ரிட்ஜ் பூங்காவிற்கு அரு கிலுள்ள திரு பிள்ளையின் வாடகை வீட்டில் நடந்தது.
"நோயாளியான உங்கள் மனை வியின் மருத்துவச் சேவைக்காகத் தான் அந்தத் தாதி நியமிக்கப்பட் டார். நீங்கள் விரும்பும் வேறு சேவைக்காக அல்ல," என மிகக் கடுமையாக நீதிபதி சாடினார். துபாயில் இரும்பு வணிகத் தொழிலை நடத்தும் திரு பிள்ளை, ஆகஸ்ட் மாதம் நடந்த முதல் நாள் வழக்கு விசாரணையில் தனது குற்றங்களை மறுத்தார். பின்னர் தாம் புரிந்த குற்றங்களை ஒப்புக் கொண்டார். சிங்கப்பூரரான 25 வயது தாதியை உடலளவில் மானபங்கப் படுத்தியது மட்டும் இல்லாமல் அவரின் மாண்பையும் அவமதித் ததை திரு பிள்ளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

