அவை எந்த ஒரு சமயத்தின் அடையாளமும் அல்ல

அவை எந்த ஒரு சமயத்தின் அடையாளமும் அல்ல

1 mins read
3414e7db-5518-4b77-b421-981992995d72
-

பயங்கரவாத அமைப்புகள், அவற் றின் செய்கைகள் எப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தினாலும், தீவிரவாதமும் பிரிவினைவாத நடைமுறைகளும் எந்த ஒரு சம யத்தின் அடையாளமும் அல்ல. சமுதாயத்தில் "ஆழமான பிரி வினையை" விதைத்து, இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வை வளர்ப்பது ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் குறிக்கோள் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் நேற்று சுட்டிக் காட்டி வலியுறுத்தினார். "குறிப்பிட்ட ஒரு சமயத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத் தும் எண்ணத்திலிருந்து நாம் விலகிச் செல்லவேண்டும்," என் றார் திரு சண்முகம். அரசாங்கச் சார்பற்ற முஸ்லிம் அமைப்புகள் அமைதி காப்பதில் ஆற்றக்கூடிய பங்களிப்பு பற்றிய இரண்டு நாள் அனைத்துலக மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார். எல்லா தரப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளும் தங்களது இழி வான நோக்கங்களை அடைய சம யத்தைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள் என்பதற்கு இவ்வட்டாரத் தில் நிலவும் ஆழமான பூசல்களை அவர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சமயத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தும் எண்ணத்திலிருந்து நாம் விலகிச் செல்லவேண்டும் என்றார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம். படம்: பெரித்தா ஹரியான்