தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

61 பள்ளிகளுக்கு புதிய முதல்வர்கள் நியமனம்

1 mins read

ராஃபிள்ஸ் கல்வி நிலையம், ஹுவா சோங் கல்வி நிலையம் உட்பட தொடக்கநிலைப் பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையில் 61 பள்ளிகளுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இது கல்வி அமைச்சின் வருடாந்திர பணியிட மாற்றுப் பயிற்சியின் ஒரு பகுதி யாகும். இந்தப் பட்டியலில் 16 பள்ளி களுக்கு நியமிக்கப்பட இருப்பவர் கள் முதன் முறையாக தங்களின் சேவையைத் தொடங்க இருக்கி றார்கள். கல்வித் துறையில் தலைமைப் பொறுப்பை முதன்முறையாக ஏற் கும் இந்த 16 பள்ளி முதல்வர் களின் வாழ்க்கைப் பாதையில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என கல்வியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்தது. "புதிய பள்ளி முதல்வர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன் படுத்திக் கொண்டு புதிய சவால் களை ஏற்று பள்ளியைச் சிறப்பாக வழிநடத்த முடியும்" என கல்வி அமைச்சு கூறியது.