4.6% பொருளியல் வளர்ச்சி உற்பத்தித் துறையின் வளர்ச்சி

4.6% பொருளியல் வளர்ச்சி உற்பத்தித் துறையின் வளர்ச்சி

1 mins read

காரணமாக மூன்றாவது காலாண் டில் சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டுக்காண்டு என்ற அடிப் படையில் 4.6% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இது ஆகப் பெரிய வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. முன்னுரைப் பையும் மிஞ்சிய வளர்ச்சி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 2 முதல் 3%ஆக இருக்கும் என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. அதற்கு முன்பு இந்த மதிப்பீடு 1 முதல் 3%ஆக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டு இருந்தது. முதலாம் காலாண் டில் வளர்ச்சி 2.7%ஆக இருந்தது.

இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த 2.9 விழுக்காட்டை விட பொருளியல் வலுவான வளர்ச்சி கண்டதால் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் 3.8% வளர்ச்சி இருந்ததாக புளூம்பெர்க் நடத் திய கருத்துக்கணிப்பில் பங் கேற்ற ஆய்வாளர்கள் தெரிவித் தனர். ஏற்றுமதி, உற்பத்தித்துறை ஆகியவற்றின் போக்கு ஏறு முகமாக இருந்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பொருளியல் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. அப்போது ஆண்டுக் காண்டு அடிப்படையில் பொரு ளியல் 4.9% வளர்ச்சி கண்டது. அதற்கு முந்தைய காலாண்டிலும் அதே வளர்ச்சி இருந்தது.