ஒற்றுமையான, பாதுகாப்பான, அக்கறைமிக்க சமுதாயத்தை உரு வாக்க பல்வேறு சமயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப் படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் வலியுறுத்தியிருக்கிறார். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் சமயம் ஒரு வலுவான சக்தியாகத் திகழ்கிறது என்று திரு டியோ குறிப்பிட்டார். அதே வேளையில் மக்களை, சமூகங்களைப் பிளவுபடுத்தும் பயங்கரவாதம், வன்முறைக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தவும் முடியும் என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ எச்சரித்துள்ளார். ஜாமிஆ சிங்கப்பூர் அமைப்பு தனது 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதையொட்டி மரினா பே சேண்ட்சில் நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு பேசினார். "நாம் வாழும் சமுதாயத்தை வலுப்படுத்த உதவும் வகையில் நல்ல செயல்களைச் செய்ய சம யத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பல சமய உறவுகளை வலுப்படுத்த வலியுறுத்து
1 mins read

