'புரோஜெக்ட் கிவ்' நன்கொடை திரட்டு

2 mins read
33381f1b-86d9-40f1-9bba-450705de4c06
-

சுதாஸகி ராமன்

சிங்கப்பூரில் வசதிகுறைந்த இந் திய மாணவர்களின் கல்வி, நிதி தேவைகளைப் பூர்த்தி செய்து ஆதரவளிக்க சிண்டாவின் 'புரோஜெக்ட் கிவ்' நிதி திரட்டு இயக்கம் கடந்த 2001ஆம் ஆண் டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதும் நடத்தப் படும் இந்த இயக்கம், வசதி குறைந்தவர்களை அவ்வப்போது நினைத்து பார்ப்பதுடன் அவர் களுக்கு உதவும் வகையில் தாரா ளமாக நன்கொடைகள் வழங்க தீபாவளி காலத்தின்போது தீவிரப் படுத்தப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 6,600க் கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடையும் இந்த இயக்கத் துக்கு, மக்கள் நன்கொடைகளை வழங்குவதற்கு ஏதுவாக லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேனில் 'புரோஜெக்ட் கிவ்' கூடம் ஒன்று தீபாவளியையொட்டி அமைக்கப் பட்டுள்ளது. சிண்டாவின் வாழ்நாள் அறங் காவலரான சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று மாலை 'புரோஜெக்ட் கிவ்' கூடத் திற்கு வருகையளித்தார். நிதி யுதவி அளித்த 15 நிறுவனங்களி மிருந்து அவர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டார்.

கேம்பல் லேன் தீபாவளிச் சந்தையில் அமைந்துள்ள சிண்டாவின் 'புரோஜெக்ட் கிவ்' நன்கொடை கூடத்துக்கு வருகையளித்து பல்வேறு அமைப்புகளிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டார் சிண்டாவின் வாழ்நாள் அறங்காவலரான சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் (முன் வரிசையில், இடமிருந்து மூன்றாவது). படத்தில் மினி என்வைரமென்ட் சர்வீஸ் நிறுவனங்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அப்துல் ஜலீல் (வலமிருந்து மூன்றாவது) தனது நிறுவனத்தின் சார்பில் $100,000 நன்கொடை வழங்கினார். வலக்கோடியில் சிண்டாவின் தலைமை நிர்வாகி திரு கே. பரதன். படம்: திமத்தி டேவிட்