வேலைகள் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கப்படும்

வேலைகள் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கப்படும்

1 mins read
ca6757ca-a7d5-462b-afaa-8356ddf60914
-

சிறப்புக் கல்வி வழங்கும் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு வேலைகள், வேலையி டங்கள் தொடர்பான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும் ஒரு புதிய திட்டம் அறிமுகம் கண்டிருக்கிறது. 'ஜாப் ஷேடோவிங் டே' என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் சிறப்புப் பள்ளிகளின் பயி லும் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் வேலை தொடர்பான ஆர்வத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள வழிவகுக்கும். அடுத்த ஆண்டு முதல் இத் திட்டம் ஆண்டுதோறும் நடத்தப் படும் என்று தெரிவித்தார் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ. வேலை தொடர்பான ஆர்வம் முன்கூட்டியே தூண்டப்படுவதால் சிறப்புக் கல்வியை முடித்த மாண வர்களின் வேலைத் தகுதி பலப் படுத்தப்படும் என்று அமைச்சர் லீ நேற்று நடைபெற்ற 'எஸ்ஜி எனே பல்' பயிற்சி மற்றும் வாழ்க்கைத் தொழில் சந்தையில் கூறினார். உடற்குறையுள்ளோருக்கு ஆத ரவளிக்கும் அமைப்பான 'எஸ்ஜி எனேபல்' கடந்த ஆண்டில் இத் திட்டத்தைச் சோதித்துப் பார்த்தது. இத்திட்டத்தின் மூலம் சிறப்புக் கல்வி மாணவர்கள் ஹோட்டல், உணவகம் அல்லது அரசாங்க அமைப்பு போன்ற இடங்களில் ஒரு நாளைக்கு வேலைக்கு அமர்த் தப்படுவார்கள்.

எஸ்ஜி எனேபல் அமைப்பின் தொண்டூழியர் திரு ஜெஃப்ரி சூ (வலது) வேலைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முறைகளை நோராய்னி சானியிடம் (இடக்கோடி) விளக்குகிறார். வலப்பக்கம் இருப்பவர் நோராய்னியின் உதவியாளர் லினா மரினா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்