கடைத்தொகுதியில் ஆடவரைத் தாக்கியவரை போலிஸ் தேடுகிறது

கடைத்தொகுதியில் ஆடவரைத் தாக்கியவரை போலிஸ் தேடுகிறது

1 mins read
1daa3ac7-794d-4a99-aa95-cae28ba44136
-

கோல்டன் மைல் கடைத் தொகுதியில் 25 வயது ஆடவரைத் தாக்கியவரை போலிஸ் தேடி வருகிறது. புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஓர் ஆடவர் திறக்கப்படாத கடையின் வெளியில் படுத்திருந்த நிலையில் அவரை வெள்ளை ஆடை அணிந்த ஒருவர் சரமாரியாக அவரை மிதித்தார் (படம்). அருகில் நின்று கொண்டிருந்த கருப்பு ஆடை அணிந் திருந்த மற்றோர் ஆடவரை அந்த நபர் முகத்தில் குத்தி னார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சில முறை கீழே கிடந்த ஆடவரை அந்த வெள்ளை ஆடை அணிந்திருந்தவர் மிதித்தார். தாக்கப்பட்ட ஆடவர் கதறுவது அங்கிருந்த அனை வருக்கும் கேட்டது. தாக்கப்பட்டவர் அங்கிருந்த மற்றவர்க ளால் ஏன் காப்பாற்றப்படவில்லை என ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். புதன்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது என போலிசார் கூறினர். தாக்கப்பட்ட ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஒரு சிங்கப்பூரர் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. இதன் தொடர்பில் போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.