கோலாலம்பூர்: குறுகிய மனப்பான்மை உள்ளவர் களாக இருக்க வேண்டாம் என்று முஸ்லிம்களை ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் கேட்டுக்கொண்டார். முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்திய வங்கி நோட்டுகள், ஹோட்டல் தலையணை போன்ற பொருட்களை பயன்படுத்து வதை முஸ்லிம்கள் குறுகிய எண்ணத்தோடு பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். அவ்வாறு பயன்படுத்துவதை தவிர்த்தால் சமுதாயத்தில் முஸ்லிம்கள் சேர்ந்து வாழ முடியாது என்றும் குகைகளில் தனியாக வசிக்க நேரிடலாம் என்றும் சுல்தான் கூறினார். பணம் பலரின் கைக்கு மாறி வரும் நிலையில் அரசாங்கம் முஸ்லிம்களுக்காக மட்டுமே பணத்தை அச்சிட முடியுமா? என்றும் அவர் வினவினார். ஜோகூரில் பாகுபாட்டுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம்களுக்கு ஜோகூர் சுல்தான் எச்சரிக்கை
1 mins read

