எல்லா இனத்தவரும் பயனடையும் கூட்டுத் திட்டங்களில் தங்கள் பங்கை அளித்துவரும் நான்கு சுய உதவிக் குழுக்களை அதிபர் ஹலிமா யாக்கோப் பாராட்டியுள் ளார். சீனர் மேம்பாட்டு உதவிச் சங்கம், மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், யுரேஷியர் சங்கம் ஆகிய நான்கு சுய உதவிக் குழுக்கள் அளித்த விருந்துக்கு முன் செய்தியாளர் களிடம் பேசிய அதிபர் ஹலிமா, சுய உதவிக் குழுக்களின் துணைப்பாட வகுப்புகள், பள்ளிக் குப் பிந்திய பராமரிப்பு நிலையங் கள் போன்றவற்றின் பங்களிப் பைப் பாராட்டிப் பேசினார். "தங்களின் சொந்த இனத் திற்கு மட்டும் சேவையளிக்காமல் அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் பொதுவான சேவை களை வழங்கி, எல்லாரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைய வைக்கிறார்கள்," என திருவாட்டி ஹலிமா தெரிவித்தார்.
வலமிருந்து) சிங்கப்பூர் யுரேஷியர் சங்கத்தின் தலைவர் திரு பெனட் திசேரா, சீனர் மேம்பாட்டு உதவிச் சங்கத்தின் தலைமை இயக்குநர் திரு பொக் செங் சோங், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி திரு கே. பரதன், மெண்டாக்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ரஹாயு புவாங் ஆகியோருடன் அதிபர் ஹலிமா யாக்கோப் (இடது) உரையாடுகிறார். படம்: பெரித்தா ஹரியான்

