பராமரிப்பும் அதன் தொடர்பான கண்காணிப்பும் கோளாறுகளைத் தடுக்கலாம்

பராமரிப்பும் அதன் தொடர்பான கண்காணிப்பும் கோளாறுகளைத் தடுக்கலாம்

2 mins read
1a82e6c8-034b-4944-9f61-1c3d783f4f96
-

எம்ஆர்டி ரயில்கள் தடையின்றி சேவையாற்றுவதற்கு அதன் தொடர்பான சாதனங்கள், மின் தடங்கள், தண்டவாளங்கள் போன்றவற்றின் பராமரிப்பு முக்கி யம் என்றாலும் அந்தப் பராமரிப்பு முறையாக நடைபெறுகிறதா என்ப தைக் கண்காணிப்பது அதைவிட முக்கியம் என்று கூறினார் பராம ரிப்பு குத்தகை நிறுவனத்தை நடத்தி வரும் திரு வி. குணாளன். பராமரிப்புப் பணிகளில் கண் டிப்பு மிகவும் அவசியம். அப்போது தான் அதின் மெத்தனப்போக்கு இருக்காது என்று கூறும் 53 வயது திரு குணாளன், "எஸ்ஆம் ஆர்டி ரயில் சேவைகளில் தடை ஏற்பட்டால் நிலப் போக்குவரத்து ஆணையம் அதற்கு கடுமையான தண்டனையாக அதிக அளவிலான அபராதத்தை விதிக்கிறது.

"அதில் அதிக அளவில் பாதிக் கப்படும் பயணிகளுக்கு அந்தச் சமயத்தில் மட்டும் இலவச பேருந்து சேவைகளை அளித்தால் போதுமா? அந்தச் சேவை தடை யால் அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சலுக்கு யார் பதிலளிப் பது? "பொதுப் போக்குவரத்தில் பய ணம் செய்யுங்கள் என்று அரசாங் கம் அடிக்கடி வலியுறுத்துகிறது. ஆனால், இப்படி அடிக்கடி சேவைத் தடைகளால் பாதிக்கப் படும் ரயில்களில் எவ்வாறு பய ணம் செய்வது?," என்றும் திரு குணாளன் வினவினார். இதற்கிடையே, பீஷான் ரயில் நிலையத்தில் வெள்ளத் தடுப்பு சாதனத்தைச் சரிவர பராமரிக்கத் தவறிய எஸ்எம்ஆர்டி பராமரிப்புக் குழுவினரின் போனஸ் தொகை வெட்டப்படும் என எஸ்எம்ஆர்டி நிறுவனத் தலைவர் சியா மூன் மிங் நேற்று முன்தினம் கூறினார்.

பீஷான் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள சுரங்கத்தில் வெள்ளம் தேங்கியிருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்