சாங்கி விமான நிலைய முனையக் கட்டடம் 3ல், நேற்று அதிகாலை நேரத்தில் வெடிப்புச் சத்தமும் துப் பாக்கிச் சண்டை சத்தமும் பலமாக ஒலித்தன. 'நார்த்ஸ்டார்' எனும் பயங்கரவாதத் தாக்குதல் பாவ னைப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கைகள் அரங்கேறின. விமான நிலைய ரயில் நிலை யத்தின் நடைமேடையில் தொடங் கிய பாவனைத் தாக்குதல்களைப் பாதுகாப்பு அமைப்புகள் கட்டுப் படுத்தி பயிற்சி செய்தன. வெற்றுத் தோட்டாக்கள் நிரப் பப்பட்ட நீள்துப்பாக்கிகளுடன் ரயி லில் இருந்து இறங்கிய இரண்டு துப்பாக்கிக்காரர்கள், பயணிகளை நோக்கி தாறுமாறாகச் சுடத் தொடங்கினர். பொதுப் போக்குவரத்து பாதுகா வல் பிரிவின் அதிகாரிகள் அவர்க ளைச் சூழ்ந்து கொண்டபோது, துப்பாக்கிக்காரர்களில் ஒருவன் அங்கிருந்த ஓர் ஆடவரைப் பிணைபிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். அதிகாரிகள் துப்பாக்கிக் காரனை சுட்டு வீழ்த்தினார்கள். ஆனால், இரண்டாவது துப்பாக்கிக் காரன் பயணிகள் புறப்பட்டுச் செல்லும் பகுதியை நோக்கி ஓடி விட்டான். பாவனைத் தாக்குதலின் அடுத்த கட்டத்தில், வெடிகுண்டு தற்கொலையாளி "நீங்கள் எல் லாரும் சாகப் போகிறீர்கள்!" என்று கத்திக்கொண்டே சட்டை யைக் கிழித்து குண்டை வெடிக்கச் செய்தான். இந்த வெடிப்பில் பலர் வீழ்ந்தனர்.
சாங்கி விமான நிலையத்தின் பயண மாற்று இடத்தில் விமான நிலைய போலிஸ் அதிகாரி ஒரு வர் தயார் நிலையில் நின்றிருக்க, சிறப்பு நடவடிக் கைகள் தளபத் தியத்தின் அதி ரடிப் படையினர் மிரட்டலை எதிர்கொள்ள விரைகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

