வைஃபை பாதுகாப்பு குறைபாட்டால் உலகெங்கும் பாதிப்பு

வைஃபை பாதுகாப்பு குறைபாட்டால் உலகெங்கும் பாதிப்பு

1 mins read
3b66f914-6759-4ad2-9fb8-547dac1284a3
-

வைஃபை சாதனங்களில் புதி தாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கடுமையான பாதுகாப்புக் குறை பாடுகளால் உலகம் முழுவதும் பில்லியன்கணக்கானோரும் சிங் கப்பூரில் கிட்டத்தட்ட எல்லா இணையப் பயனீட்டாளர்களும் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. சிலவகை சாதனங்களுக்கும் மென்பொருட்களுக்கும் குறைபாடு களைச் சரிசெய்வதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பல சாதனங்களுக்குக் கூடிய விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இருந்தாலும், குறிப்பிட்ட சில சாதனங்களில் பிரச்சினை நீடிக்கிறது. சிங்கப்பூர் கணினி பாதுகாப்பு அவசரகாலச் செயற்குழு நேற்று பிற்பகல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

"வைஃபை குறைபாடுகளால் வீட்டிலும் அலுவலகத்திலும் வைஃபை இணைப்பைப் பயன் படுத்துவோரின் அந்தரங்கத் தரவு கள் பாதிப்படையலாம்," எனக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டது. வைஃபை பயன்படுத்தும் கிட் டத்தட்ட எல்லா சாதனங்களும் பாதுகாப்புக் குறைபாட்டால் பாதிக் கப்பட்டுள்ளதாகச் செயற்குழு கூறியது. திறன்பேசிகள், கணினிகள், கண்காணிப்பு புகைப்படக் கரு விகள், ரௌட்டர்கள் போன்றவை இதில் உள்ளடங்கும். சிங்கப்பூரில் 11 மில்லியனுக்கு மேலான வீடுகள், அலுவலகங்கள், தேநீரகங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் வைஃபை இணைப்புப் பயன்படுத் தப்படுவதாக அல்லது வழங்கப்படு வதாக அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.