இஸ்தானா தீபாவளி பொது வரவேற்பு தினம்

இஸ்தானா தீபாவளி பொது வரவேற்பு தினம்

2 mins read

தீபாவளி இஸ்தானா பொது வரவேற்பு தினத்தை முன்னிட்டு இஸ்தானா வளாகம் வரும் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுமக் களுக்கு காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து விடப்படும். நாட்டின் புதிய அதிபரான பிறகு திருமதி ஹலிமா யாக் கோப்பும் அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்கப்‌ஷியும் முதன் முதலாக கலந்துகொள்ளும் இஸ்தானா பொது வரவேற்பு தினம் இது என்பது குறிப்பிடத் தக்கது. யூஹுவா சமூக மன்றம், மோல்மென்-கேர்ன்ஹில் சமூக மன்றம், நன் ஹுவா உயர்நிலைப் பள்ளி, செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப் பள்ளி, செயிண்ட் பேட்ரிக் பள்ளி ஆகிய வற்றின் இசை அங்கங்கள் நாள் தோறும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.

கம்போங் சாய் சீ பரதநாட்டியக் குழுவின் கண்கவர் நாட்டிய அங் கங்களும் மக்களைக் கவரும். சிங்கப்பூர் வனவிலங்கு காப்ப கத்தின் பறவைக் காட்சி, சிங்டெல் நிறுவனத்தின் பலூன் சிற்பக் கூடம், கோக்னிஸன்ட் அமைப் பின் மருதாணி கலைக்கூடம், கோஸ்மோப்ரோஃப் நிறுவனத்தின் முக ஓவியக்கூடம் ஆகியவையும் அங்கு இருக்கும். இஸ்தானா வளாக இயற்கை நடைக்கும் பொதுமக்கள் பதிந்து கொள்ளலாம். பொது வரவேற்பு தினத்தில் இஸ்தானா தொடர்பான நினைவுப் பொருட்களும் விற்கப்படும். இந்த விற்பனையிலிருந்தும் நுழைவுக் கட்டணத்திலிருந்தும் கிடைக்கப் பெறும் நிதி நன்கொடை அமைப்பு களுக்கு வழங்கப்படும். இஸ்தானா வளாகத்துக்குள் நுழைய சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் கட்டணம் இல்லை. மற்ற அனைவரும் நுழை வுக் கட்டணமாக $2 செலுத்த வேண்டும். ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பிரதான வாயில் வழியாக இஸ் தானாவுக்குள் நுழையலாம்.