அக்டோபர் மாத வாகன உரிமைச் சான்றிதழ் ஏலக் குத்தகையில் வாகனப் பிரிவுகளில் கட்டணங்கள் ஏற்ற, இறக்கமாக இருந்தன. 1,600 சிசிக்கு உட்பட்ட பிரிவில் கட்டணம் $41,761ல் இருந்து $41,617க்குக் சரிந் தது. 1,600 சிசிக்கு மேற்பட்ட பிரிவில் கட்டணம் $48,109ல் இருந்து சற்று உயர்ந்து $49,996 ஆனது. பொதுப் பிரிவுக்கான சான்றிதழ் கட்டணம் $49,000லிருந்து உயர்ந்து $52,000ஐத் தொட்டது. மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் $5,010லிருந்து $4,903க்குக் குறைந்தது. பேருந்து, சரக்கு வாகனங்களுக்கான வர்த்தகப் பிரிவுக்கான கட்டணம் $48,902ல் இருந்து உயர்ந்து $51,890 ஆனது.
வாகன 'சிஓஇ' கட்டணங்களில் ஏற்ற இறக்கம்
1 mins read

